Friday 20 November 2015

நமது புராணங்கள் பற்றி ஒரு குறிப்பு;

புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும்.  புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன.

புராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.    
  • சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது. 
  • கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.    
  • கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார். 
  • மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது. 
  • அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார். 
  • வராக புராணம் - வராகரே கூறினார். 
  • கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார். 
  • வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும். 
  • விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.

இனி, சில புராணங்களை பற்றி பார்ப்போம்.